திருவள்ளூரில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: எம்.பி. ஜெயக்குமார் பங்கேற்பு

திருவள்ளூரில் இஃப்தார்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி: எம்.பி. ஜெயக்குமார் பங்கேற்பு
X

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி. 

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் திருவேற்காடு டி.ரமேஷ், மாவட்ட முதன்மை தலைவர் விக்டரி எம்.மோகன் , நிர்வாகிகள் குபேந்திரன், கே.ஆர்.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்து சகோதரத்துவம் தன்மையுடன் மதத்தினரும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும் என இஸ்லாமியர்கள் தரப்பில் தொழுகை நடத்தினர். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் நோன்புக் கஞ்சி கொடுக்கப்பட்டது.

இதில் நிர்வாகிகள் சிவக்குமார், ஈகை தேவேந்திரன், வீராபுரம் தாஸ், ஸ்ரீராமுலு, வேப்பம்பட்டு பொன்ராஜ் மற்றும் ஏ.யூனிஸ், எஸ்.பிலால் அஹமது, எஸ்.பிரவீன், ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் உட்பட இஸ்லாமியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு