நடிகை மரண வழக்கில்அவரது கணவர் குற்றவாளி இல்லை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் குற்றவாளி இல்லை என வழக்கில் இருந்து விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள விடுதி ஒன்றின் அறையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.இந்த சம்பவம் தொடா்பாக சித்ராவின் கணவா் ஹேம்நாத் உள்ளிட்டோா் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தது.
இந்த வழக்கின் விசாரணை, திருவள்ளூா் மகளிா் நீதிமன்றத்தில் கடந்த நான்கு வருடங்களாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் விசாரணையை சென்னையில் உள்ள கூடுதல் அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும்,இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக் கோரியும் சித்ராவின் தந்தை காமராஜ் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கை 6 மாதங்களில் முடிக்க திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணையானது. இன்று திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கில் குற்றவாளி சேர்க்கப்பட்ட ஹேம்நாத்திக்கும் இந்த வழக்கிற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என இந்த வழக்கில் இருந்து ஹேம்நாத் விடுவித்து திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu