வேலைக்கு போவது தொடர்பான தகராறில் கணவர் தற்கொலை: போலீஸ் விசாரணை

வேலைக்கு போவது தொடர்பான தகராறில்  கணவர் தற்கொலை:  போலீஸ் விசாரணை
X
வேலைக்குப்போகச்சொல்லியதால் மனைவியிடம் சண்டை போட்ட கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

திருவள்ளூர் அருகே மணவாளநகர் குமரன் நகரை குடும்பத்துடன் வசித்து வருபவர் அன்பரசன் (35). இவர் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வந்த நிலையில். கடந்த சில மாதங்களாக அன்பரசு சரிவர வேலைக்கு போகாமல் மது அருந்திவிட்டு வீட்டிலேயே இருந்ததால் குடும்பம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மனைவி அன்பரசனை பலமுறை கேட்டு கண்டித்து உள்ளார். இதன்காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 29ம் தேதி அன்பரசன், எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற அவரை சிகிச்சைக்காக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை முடிந்து அன்பரசன் வீடு திரும்பினார். பின்னர் கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த அன்பரசன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுசம்பந்தமாக அனுசுயா கொடுத்த புகாரின்பேரில், மணவாளநகர் போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து,சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!