கணவன் மனைவி தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை: போலீஸார் விசாரணை

கணவன் மனைவி தகராறில் மனைவி  தூக்கிட்டு தற்கொலை:  போலீஸார் விசாரணை
X
ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா தனது மனைவி பவானியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் கட்டிடத்தொழிலாளியாக பணிபுரிந்தனர்

கணவன் மனைவி இடையில் குடும்பத்தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஆந்திராவைச் சேர்ந்த கோவிந்தா என்பவர் தனது மனைவி பவானியுடன் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் கூலி வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் திருவள்ளூர் காந்திபுரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்தனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட பவானி யாரும் இல்லாத நேரத்தில் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் பவானி உடலை கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவி இடையே தகராறு காரணத்தினால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.



Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!