திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக அறிவிப்பு!

திருவள்ளூரில் பள்ளிகளுக்கு விடுமுறை! கனமழை காரணமாக அறிவிப்பு!
X

ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்

திருவள்ளூர் மாவட்டத்தில், கன மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் இன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

கனமழை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பொன்னேரி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம், பூண்டி பெரியபாளையம், மாதவரம், தாமரைப்பாக்கம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு 11 மணி முதல் இருந்து காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ்.

திருவள்ளூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கொரட்டூர்-8.4 செ.மீ.

பூந்தமல்லி-7.4 செ.மீ.

செங்குன்றம்-3 செ.மீ.

ஆவடி-3 செ.மீ.

தாமரைப்பாக்கம், திருவள்ளூர், சோழவரம் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
ai ethics in healthcare