திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையினால் நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் பலத்த  மழையினால் நீர்வரத்து அதிகரிப்பு
X

திருவள்ளூர் மாவட்டத்தில் பலத்த மழையினால் நிரம்பியுள்ள ஏரி.

திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்யும் பலத்த மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் ௨௯ந்தேதி தொடங்கி உள்ளது. வடகிழக்குபருவமழை அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பாகவே தமிழக்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து உள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ௧௪ மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பின்படி திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு முதல் திருத்தணி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, செங்குன்றம், தாமரைப்பாக்கம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், உள்ளிட்ட இடங்களில் தற்போது வரை மழை பெய்து வருகிறது. பரவலாக ஒருசில இடங்களில் கன மழையும் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்தது. குறிப்பாக செங்குன்றத்தில் மிக கனமழையாக 13செ.மீ. மழை பொழிந்துள்ளது.

நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்குவதற்கு முக்கிய ஆதாரமாக விளங்கு் புழல் ஏரி, சோழவரம் ஏரி, கண்ணன்கோட்டை ஏரிகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. புழல் ஏரிக்கு நீர்வரத்து 967 கனஅடியாக அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2536 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதே போல சோழவரம் ஏரிக்கு நேற்று 10கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 66 கனஅடியாக அதிகாரித்துள்ளது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 194 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை ஏரிக்கு நேற்று 23கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 70 கனஅடியாக அதிகரித்துள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரி முழு கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியை எட்டி முழுமையாக நிரம்பியுள்ளது. தொடர்ந்து 105வது நாளாக ஏரியில் இருந்து 62 கனஅடி உபரிநீர் கலிங்கு வழியே வெளியேறிக் கொண்டிருக்கிறது.

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் ஏரிகளுக்கான நீர்வரத்தை 24மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், நீர்வரத்திற்கேற்ப உபரிநீர் வெளியேற்றுவது முடிவெடுக்கப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015வது ஆண்டு இதே போல் பெய்த பலத்த மழையினால் செங்கல்பட்ட ஏரி உள்ளிட்ட ஏரிகள் நிரம்பியபோது தண்ணீர் திறப்பில் ஏற்பட்ட தாமதத்தின் காரணமாக தண்ணீர் ஊருக்குள் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா