திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை
X

திருவள்ளூர், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் 4.மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது

அறுவடைக்காக காத்திருக்கும் நிலையில், பெய்து வரும், மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்

திருவள்ளூர், பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார இடங்களில் 4.மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாத கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. மேலும் காற்று, இடி, மின்னலுடன் கனமழை. அறுவடை காலத்தில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலை.

திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி சுற்றுவட்டார இடங்களில் பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை முடிவடைய உள்ள நேரத்தில் நேற்று இன்று சென்னையில் எதிர்பாராத விதமாக பலத்த மழை கொட்டியது. இந்நிலையில், சென்னையின் புறநகர் பகுதிகளான பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, ஆவடி., சோழவரம், செங்குன்றம், புழல் சுற்றுவட்டார இடங்களில் சுமார் இன்று சுமார் காலையிலிருந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகல் 3. மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாத 7 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி வருகிறது.

பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பொழிந்து வருவதால், தைப்பொங்கலுக்கு நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்காக காத்திருக்கும் நிலையில், பெய்து வரும், மழையால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடைக்காரர்கள் கூறுகையில், புத்தாண்டு முன்னிட்டு வியாபாரிகள் அதிக அளவில் கடைகளில் பொருட்களை வாங்கி வைத்துள்ளதாக, கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டதாகவும் 2022 நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த ஆண்டு மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!