கடும் பனியில் மூழ்கிய திருவள்ளூர்

திருவள்ளூரில் கடும் பனிமூட்டமாக இருந்ததால் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டு வாகனங்கள் அனைத்தும் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் எப்போதுமே ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் கடும் பனிப்பொழிவு இருக்கும். அதுவும் நேற்றோடு மார்கழி நிறைவு என்பதால் கடும்பனிப்பொழிவு காணப்பட்டது. மார்கழி மாதத்தில் மரமெல்லாம் குளிரு என்றும் தை மாதத்தில் தரையெல்லாம் குளிரு என்றும் அக்காலம் முதல் சொல்லப்படுவதும் உண்டு. அந்த வகையில் நேற்று கடும் பனியாக இருந்ததால் ரோட்டில் சென்ற வாகனங்கள் அனைத்துமே ஹெட்லைட்டை எரிய விட்டு சென்றதைக் காணமுடிந்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக திருவள்ளூர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை, தாமரைப்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி உன்கிட்ட பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் மெதுவாக முகப்பு விளக்கு எரிந்தபடி சென்றனர். இன்று அதிகாலையில் இருந்து கடும் பனிமூட்டம் இருந்த காரணத்தினால். திருவள்ளூர் பஸ் நிலையம், ரயில் நிலையம், தேரடி, திருவள்ளூர் திருப்பதி நெடுஞ்சாலை, திருவள்ளூர் ஊத்துக்கோட்டை சாலை, திருவள்ளூர் செங்குன்றம் சாலையன என எங்கு பார்த்தாலும் வெள்ளை போர்வை போற்றியது போல் பனிமூட்டம் காணப்படுகிறது.
இதன் காரணமாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பனிமூட்டத்தால் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு மெதுவாக ஊர்ந்து ஊர்ந்து செல்கின்றனர். இன்று பொங்கல் பண்டிகை என்பதால் பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் பொங்கல் வைக்க தேவையான கரும்பு, பானை போன்ற பொருட்களை வாங்க வரும்போது கடும் குளிரிலும் அவதியுற்றதைக் காணமுடிந்தது. குறிப்பாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க அவதிப்பட்டு வருகின்றனர். காலை 8 மணி வரையிலும் பனி குறையாமல் உள்ளதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu