சுருட்டபள்ளி ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
சுருட்டப்பள்ளி கோவிலில் நடைபெற்ற குருப்பெயர்ச்சி விழா
தமிழக எல்லை ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் சுருட்ட பள்ளி கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ பள்ளி கொண்டீஸ்வரர் திருக்கோவில். குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இக்கோவிலில் குரு பெயர்ச்சியை முன்னிட்டு விநாயகர், சிவன், பார்வதி, முருகன், நவகிரகம், பள்ளிகொண்டீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நிகழ்ச்சியை முன்னிட்டு குருபகவானான தம்பதி சமேத தட்சிணாமூர்த்திக்கு குரு பெயர்ச்சியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர், ஜவ்வாது, தேன் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. வண்ண மலர்களாலும் திரு ஆவணங்களால் அலங்காரம் செய்து.
பின்னர் வெள்ளி கவசம் அணிவித்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கோயில் வளாகத்தில் 9 அடி உயரத்தில் சந்தன அலங்காரத்தோடு கஜ வாகனத்தில் குருபகவான் தட்சிணா மூர்த்தியின் பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டது.
விழாவிற்கு பள்ளிகொண்டீஸ்வரர் கோயிலில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, பாலவாக்கம், தண்டலம், பெரியபாளையம், சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மட்டுமல்லாது ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிகாரர்கள் அனுகிரக அர்ச்சனைகளையும், மேஷம், ரிஷபம், கடகம், கன்னி விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசியினர் பரிகார அர்ச்சனைகளையும் செய்து கொண்டு சுவாமியை வழிபட்டனர் .
இரவு 7 மணி முதல் 9 மணி வரை கலச பூஜைகளும் தொடர்ந்து நவகிரக ஹோமம் , 27 நட்சத்திர ஹோமம், 12 ராசி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், குரு மூல மந்திர ஜப ஹோமம், ஆகியவை நடைபெற்றது. மேற்கண்ட பூஜைகளை ஆலய அர்ச்சகர் கார்த்திகேசன் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் கோயில் சேர்மேன் ஏவிஎம். முனிசந்திரசேகர் ரெட்டி, சத்தியவேடு தொகுதி எம்எல்ஏ கொனேட்டி. ஆதிமூலம் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu