மதுபாட்டில் பதுக்கி விற்றவர் மீது குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு

மதுபாட்டில் பதுக்கி விற்றவர் மீது குண்டாஸ்: கலெக்டர் உத்தரவு
X
திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியில், மதுபாட்டில் பதுக்கி விற்றவர், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூரை அடுத்த மப்பேடு பகுதியில், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்து, கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த வேலு (30) என்பவரை கைது செய்தனர்.

அவரிடன் இருந்து, 572 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். கைதான வேலு மீது, ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனையடுத்து வேலுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்ட அரவிந்த் பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், மதுவை பதுக்கி விற்பனை செய்த வேலுவை, குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

இதேபோல், திருவள்ளூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் திருவள்ளூரை அடுத்த செப்பேடு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசன் (32) என்ற் தெரிந்தது.

அவர் மீது ஆள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!