கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.. கோவிந்தராஜன் எம்எல்ஏ நேரில் ஆய்வு…
கொசத்தலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்.
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட மெய்யூர் ராஜபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள மக்கள் திருவள்ளூருக்கு சென்று வரும் வகையில் மெய்யூர்-ராஜபாளையம் இடையே செல்லும் கொசத்தலை ஆற்றில் தரைப்பாலம் ஒன்று இருந்து வந்தது.
இந்த பாலத்தை கடந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகளும், தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களும் சென்று வந்தனர். இதற்கிடையே, பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் நீர் அதிகரித்ததால் நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால், மெய்யூர்- ராஜபாளையம் இடையே கொசத்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளில் மக்கள் சுமார் 15 கிலோமீட்டர் தூரம் சுற்றிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், தரைப்பாலம் அருகே உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பகுதிகளை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் நேரில் சென்று பார்வையிட்டார்.
பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கோவிந்தராஜன் எம்எல்ஏ உத்தரவிட்டார். ஆய்வின்போது, கோவிந்தராஜன் எம்எல்ஏவுடன் பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகர், வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் மணிபாலன், மெய்யூர் ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா சரத்பாபு, சக்கரவர்த்தி ரெட்டியார், ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி ஏழுமலை, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தில்லை குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu