விவசாய நிலத்திற்கு வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயம் செய்ய லஞ்சம்:சார்பதிவாளர்உட்பட இருவர் கைது

விவசாய நிலத்திற்கு வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயம் செய்ய லஞ்சம்:சார்பதிவாளர்உட்பட இருவர் கைது
X

திருவள்ளூர் அருகே விவசாய நிலத்திற்கு வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயம் செய்ய  லஞ்சம்வாங்கிய விவகாரத்தில் இருவர் கைதுசெய்யப்பட்டனர்.  

Guideline Value Bribe 2 Persons Arrested விவசாய நிலத்திற்கு வழக்காடு மதிப்பீட்டு நிர்ணயம் செய்ய லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருவர் கைது செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Guideline Value Bribe 2 Persons Arrested

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த செல்வராமச்சந்திரன்(வயது39) சார்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.இந் நிலையில், ஆர்.கே.பேட்டை விளக்கனாம்பூடி புதூரை சேர்ந்த ஆஞ்சநேயன் மற்றும் அவரது உறவினர்கள் 4.பேருக்கு சொந்தமான 70.சென்ட் விவசாய நிலத்தை ராணிப்பேட்டை மாவட்டம் மலைமேடு கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவருக்கு விற்பனை செய்ய திருத்தணி அருகே மத்தூரைச் சேர்ந்த ஜெய்சங்கர்( வயது 54) என்பவர் நிலம் விற்பனைக்கு இடைத்தரகராக செயல்பட்டார். கடந்த 22ம் தேதி ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் சொத்து மதிப்பீடு அதிகமாக இருந்ததால்,வழிகாட்டு நிர்ணயம் செய்ய அறிக்கை மாவட்ட பதிவாளருக்கு அனுப்பிவைக்க சார்பதிவாளர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகவும்,இறுதியில் ரூ. 35 ஆயிரம் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது. நிலத்திற்கு வழிகாட்டு மதிப்பீடு நிர்ணயம் செய்ய அறிக்கை அனுப்பிவைக்க லஞ்சப்பணம் தர விரும்பாத இடைத்தரகர் ஜெய்சங்கர் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் செய்துள்ளார். லஞ்ச ஒழழிப்புத் துறை டி.எஸ்.பி கலைச்செல்வன் உத்தரவின் பேரில் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி தலைமையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை முகாமிட்டு மறைந்திருந்த போது சார்பதிவாளர் செல்வ ராமச்சந்திரனிடம் ஜெய்சங்கர் ரசாயனம் தடவிய லஞ்ச பணம் வழங்க முயன்ற போது அருகில் இருந்த தற்காலிக கணினி இயக்குபவர் சிவலிங்கமிடம் வழங்க கூறியுள்ளார்.

அந்த பணத்தை அவர் பெற்றுக்கொண்டிருந்த போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். சொத்து மதிப்பீடு நிர்ணயம் செய்ய ரூ. 35 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர், அலுவலக கணினி இயக்குபவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆர்.கே .பேட்டையில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.

Tags

Next Story
ai platform for business