ஆரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு

ஆரணி ஆற்றில் தொடர் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு
X
மங்களம்-புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றில் நடைபெற்று வரும் தொடர் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஆரணி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புதுப்பாளையம், மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 8000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதிகளில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் நம்பி வாழ்ந்து வருகின்றனர். பொதுமக்கள் ஆரணி ஆறு ஒட்டியுள்ள விளைநிலங்களில் நெற்பயிர், வெண்டைக்காய், கத்திரி, முள்ளங்கி, கொத்தவரங்கா,சிறு கீரை, அரைக்கீரை, ஒரு லிட்டர் பருவத்திற்கு ஏற்ப வகைகளை பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியில் விவசாயிகள் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதிலிருந்து வரும் தண்ணீரைக் கொண்டு விவசாயம் செய்து வருவார்கள். எப்போதும் இப்பகுதியில் நீர்மட்டம் குறையாமல் இருக்கும். ஆனால் சமீப காலத்தில் இருந்து இந்த ஆரணி ஆற்றில் இரவு, பகல் என பாராமல் மணல் கொள்ளையர்கள் சாக்கு பைகளிலும், நிரப்பி அவற்றை பதுக்கி வைத்து ஆட்டோக்களிலும், இருசக்கர வாகனத்திலும் கடத்திச் சென்று அங்கிருந்து ஆரணி, பெரியபாளையம், செங்குன்றம்,பொன்னேரி ஒரு லிட்டர் பகுதிகளில் மூட்டை ஒன்று 100 முதல் 150 ரூபாய் வரையில் விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் சிலர் தெரிவிக்கையில், எங்கள் பகுதியில் இந்த ஆரணி ஆற்றின் நீர்மட்டத்தை நம்பி தாங்கள் விவசாய பட்டா நிலத்தில் லட்ச கணக்கில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து அந்த தண்ணீரை நம்பி விவசாயம் செய்து வருகிறோம்.

சில மணல் கொள்ளையர்கள் அத்துமீறி ஆரணி ஆற்றில் நுழைந்து மணல் களத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இது மட்டுமன்றி ஊராட்சிகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளும் மூலம் கிராமத்தில் குழுக்கள் மூலம் தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வருவதாகவும். இந்த மணல் திருட்டு குறித்து உரிய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும்,எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மிகவும் அவதிப்பட்டு வருவதாக தெரிவித்தனர். எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை கண்காணிப்பாளர் கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!