நரிக்குறவர்களுக்கு அரசு வழங்கிய நிலத்தை மீட்டு தரக்கோரி கிராம சபை கூட்டத்தில் மனு

கிராம சபைக்கூட்டத்தில் மனு அளிக்க வந்த ஆண்கள்.
Grama Saba Meet Requested Application
சோழவரம் அருகே தமிழக அரசால் தங்களுக்கு பூமிதானமாக வழங்கப்பட்ட 45 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு. அதனை மீட்டுத்தரக்கோரி நரிக்குறவர்கள் ஒரக்காடு கிராமசபை கூட்டத்தில் கண்ணீருடன் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஒரக்காடு ஊராட்சியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் இப்பகுதியில் நரிக்குறவர் இன மக்கள் சார்ந்த 45.குடும்பங்கள் கடந்த 1986 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகின்றனர்.
Grama Saba Meet Requested Application
கிராம சபைக்கூட்டத்தில் மனு அளித்த பெண்கள்.
இவர்கள் வாழ்வாதாரம் மேம்படுத்தும் வகையில் அன்றைய தமிழக முதலமைச்சராக இருந்த எம் ஜி ஆர் காலகட்டத்தில் இந்த 45 குடும்பங்களுக்கு ஐந்து குடும்பத்திற்கு ஒரு பட்டா விகிதம் 45 ஏக்கருக்கு 9 கூட்டு பட்டாவாக பதிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலத்தை தற்போது தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் வேலி அமைத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இது சம்பந்தமாக அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்ற தலைவர் நீலா சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் லட்சுமணன், ஊராட்சி செயலர் சரளா முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற நரிக்குறவர்கள் இன மக்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள தங்களுக்கு சொந்தமான 45 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி ஊராட்சிமன்ற தலைவரிடம் மனு அளித்தனர். இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு இங்கு வசித்து வந்த எங்கள் முன்னோருக்கு ஒரு குடும்பத்திற்கு ஒரு ஏக்கர் வீதம் 45 குடும்பத்திற்கு 45 ஏக்கர் நிலத்தை பூமிதானமாக அளித்ததாகவும் எங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக வெளியூர்களுக்கு சென்ற சூழ்நிலையில் சிலர் போலியான ஆவணங்கள் தயாரித்து 45 ஏக்கர் நிலத்தை அபகரித்து விட்டதாகவும் இதற்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்த நரிக்குறவர்கள் நாடோடியாக இருக்கும் தங்களுக்கு ஊராட்சிமன்ற தலைவர் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி தனியார் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலத்தை மீட்டு தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். நரிக்குறவர்களின் கோரிக்கையின்படி ஆக்கிரமிப்பை மீட்டுத்தர கிராம மக்கள் ஆதரவுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu