கிராமசப கூட்டத்தில் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

Grama saba Meet Public Agitation பெரியபாளையம் ஊராட்சி கிராம சபையில் பொதுமக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Grama saba Meet Public Agitation

திருவள்ளூர் மாவட்டம். எல்லாபுரம் ஒன்றியம்,பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 12,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் எம் ஜி ஆர் நகர் என்ற பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், இப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கும் ஒவ்வொரு ஆண்டும் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று இப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

Grama saba Meet Public Agitation



இவர்கள் தாங்கள் பகுதிக்கு மழை நீர் வடிகால் கால்வாய் அமைத்து தர முறையிட்டும் மனு அளித்ததின் பெயரில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கால்வாயில் இருந்து செல்லும் தண்ணீர் வெளியே செல்வதற்கு வழிவகை செய்யாததால் மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி படிப்பதால் அப்பகுதி மக்களுக்கு மர்ம காய்ச்சல் ஏற்படுவதாகவும், துர்நாற்றம் வீசுவதால் உணவு கூட சாப்பிட முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனை அடுத்து நேற்று குடியரசு தினத்தையொட்டி நடைபெற்ற பெரியபாளையம் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலையிடம் இது சம்பந்தமாக மனு அளித்தனர். அப்போது ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி திருமலை தெரிவிக்கையில் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஷ்,ஊராட்சி செயலர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

Tags

Next Story
ai solutions for small business