எல்லாபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள்

பெரியபாளையம் அருகே கோடு வெளி ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
Gram Sabha -திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதி எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி ஊராட்சி, இந்திரா நகர், ஆலமரம் அருகே உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு,ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சரத்குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பற்றாளராக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் ஆட்டுக் கொட்டகை, மாட்டு கொட்டகை, சாலை வசதி, கழிவறை வசதி உள்ளிட்டவை மேற்கொள்வது எனவும், திட்டப்பணிகளுக்கு பயனாளிகளை தேர்வு செய்வது என்றும் கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், பொது மக்களின் கோரிக்கைகளான முதியோர் உதவித்தொகை, பட்டா, 100 நாள் வேலை அட்டை, ரேஷன் கார்டு, ஜாதி சான்றிதழ், தெருவிளக்கு வசதி உள்ளிட்டவைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு போர்க்கால அடிப்படையில் செய்து தருவதாகவும்,சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர் உள்ளிட்டோரை இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற நிர்வாகம் சார்பில் கௌரவப்படுத்தினர். கூட்டத்தின் முடிவில், ஊராட்சி செயலர் தாட்சாயணி நன்றி கூறினார்.
வெங்கல் ஊராட்சியில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு வெங்கல் ஊராட்சிமன்ற அலுவலக அருகே கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு,ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி ராணி லிங்கன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கணபதி மற்றும் வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் கலந்து கொண்டார். கூட்டத்தில் அரசு திட்டப்பணிகள், ஊராட்சியின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில்,ஊராட்சி செயலர் உமாநாத் நன்றி கூறினார்.
அழிஞ்சிவாக்கம் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் ஸ்ரீராம் நகரில் உள்ள மகளிர் சுய உதவி குழு கட்டிடத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில்,அரசு திட்டப்பணிகள், ஊராட்சியின் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தின் முடிவில்,ஊராட்சி செயலர் சந்திரபாபு நன்றி கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu