திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
X
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாச்சி பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பாக நிறுத்தி வைத்துள்ள சரண் விடுப்பு சலுகையினை மீண்டும் வழங்கிட வேண்டும். 7 வது ஊதிய குழுவின் மூலம் ஊதிய கட்டமைப்பில் பாதிக்கப்பட்டடுள்ள இடைநிலை மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டினை கலைந்து ஊதியம் வழங்க வேண்டும் 7 வது ஊதியக்குழு நிர்ணயத்தில் 21 மாத நிலவுத் தொகையினை வழங்கிட வேண்டும்
தலைமைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும் 20 ஆண்டுகள் மேல் பணிபுரியும் ஓட்டுனர்சண்முகம்கால முறையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சத்துணவு அங்கன்வாடி ஊர்ப்புற நூலகர்கள் பொது சுகாதாரத்துறை பொது நூலகத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகள் பணிபுரி துப்புரவு பணியாளர்கள் ஓட்டுனர்கள் பணி நிரந்தரம் செய்து கல முறை ஊதியம் வழங்கிட வேண்டும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி தனியார் மையம் மூலம் பனி நியமனம் செய்திடும் அரசாணை ரத்து செய்து அரசு பணியாளராக அவர்களை ஆக்க வேண்டும்
என உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலக ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கம் கூட்டமை ப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில செயலாளர் கணேசன் மாவட்ட அரசு அலுவலக உதவியாளர் சங்கத்தின் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!