திருவள்ளூர் அருகே அரசு பள்ளி ஆண்டு விழா

ஆண்டு விழாவையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
Government School Annual Day
திருவள்ளூர் அருகே இயங்கி வரும் ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்ச்சியில் தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கையின் போது பணம் பெறுவதைப் பள்ளி மாணவர்கள் தத்ரூப நாடகமாக நடத்திக் காட்டிய நிகழ்வும், பாடல் மூலம் பெற்றோருக்கு மரியாதை செலுத்திய நிகழ்வும் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது.
திருவள்ளூரை அடுத்த புல்லரம்பாக்கம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூதூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஆண்டு விழாவானது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா, உதவி ஆசிரியர் வசந்தி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது,இதில்
Government School Annual Day
குழந்தைகள் பேச்சுப்போட்டி கட்டுரைப் போட்டி நாடகம் என பல்வேறு வடிவங்களில் திறமைகளை வெளிப்படுத்திய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.அதில் தமிழ்நாட்டின் கலாச்சாரமான பரதநாட்டியத்தில் தொடங்கி பாஞ்சாலி சபதம் நாடகத்தின் வாயிலாக தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகக்கூடாது எனவும், அதேபோன்று கொடிகாத்த குமரன் நாடகத்தின் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாடகம் நடைபெற்றது.
மேலும் நகைச்சுவை நாடகமாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையை மையப்படுத்தி சிறுவர்கள் கணவன் மனைவி வேடமிட்டு நடத்திய நாடகம் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இடையே பலத்த கைத்தட்டல்களை பெற்றன.மேலும் இந்நிகழ்ச்சியில் முக்கிய அம்சமாக பள்ளி குழந்தைகள் தங்களது பெற்றோர்களை முன்னிலைப் படுத்தும் வகையில் பாடல்கள் வாயிலாக மரியாதையை செலுத்திய நிகழ்வு பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
மேலும் கலைநிகழ்ச்சியில் பங்கு பெற்ற மாணவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட வட்டார கல்வி அலுவலர்கள் வீரராகவன், மல்லிகா,வட்டார வள மேற்பார்வையாளர் மிகாவேல், ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்வாணன் ஆகியோர்கள் பரிசுகளை வழங்கினர்.இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் மனோகரன்,ஆசிரியர் பயிற்றுநர் தமிழரசி,பள்ளி மேலாண்மை குழு தலைவி நவீன்லா தினேஷ்,மற்றும் இல்லம் தேடி கல்விதன்னாளர்கள் ஸ்வேதா எழில் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu