அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது: காங்கிரஸ் எம்.பி

அரசு மருத்துவமனை  சிறப்பாக செயல்படுகிறது: காங்கிரஸ் எம்.பி
X
கொரோனா சிகிச்சைக்கு தேவையான படுக்கை, ஆக்சிசன், மருந்து அனைத்தும் தயாராக வைத்து அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுகிறது - காங்கிரஸ் எம்.பி

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஜெயக்குமார் , திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அரசி மற்றும் மருத்துவர்களுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களை பார்வையிட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உடன் திருவள்ளூர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ஜான் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

மத்திய மாநில அரசுகள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்து வேண்டும் என்று அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் ஆக்சிசன் , மருந்து மாத்திரை அனைத்தும் தயார் நிலையில் வைத்து, அரசு மருத்துவமனை சிறப்பாக செயல்படுவதாக காங்கிரஸ் எம்.பி பாராட்டு தெரிவித்தார்.

Tags

Next Story
அதிர்ச்சி சம்பவம்: வெள்ளித்திருப்பூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சம்