பாஜக வேட்பாளரை ஆதரவு தெரிவித்து ஜி.கே.வாசன் பிரச்சாரம்
பிரச்சாரத்தில் ஜி.கே.வாசன்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், திருவள்ளூர் பிஜேபி வேட்பாளர் பொன்.பாலகணபதியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் முருகனை தரிசனம் செய்துள்ளதாகவும், முருகன் பெயரில் கணபதிக்கு வாக்கு சேகரிப்பது விசேஷமான ஒன்று என்றார். மோடி ஆட்சியின் 10ஆண்டு தொடர் சாதனையே வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்றார். பாஜக வேட்பாளரின் வெற்றி தொகுதி மக்களின் வெற்றி என தெரிவித்தார்.
பாஜவில் இணைபவர்களிடம் மட்டுமே மோடி பேசுவதாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜி.கே.வாசன், மேடையில் இருக்கும் எங்களுக்கு தெரியாதது, பத்திரிக்கையாளர்களுக்கு தெரிகிறதா என்றார். பிரதமர் மோடியை பொறுத்தவரை தமிழ், தமிழ்நாடு, கலாச்சாரம், பண்பாடு, தமிழ் மொழி ஆகியவற்றை மிகவும் நேசிப்பவர் எனவும் செங்கோலை வரலாற்று பிரபலத்தை ஏற்படுத்தியவர் எனவும், தோற்பது உறுதி என்பதால் மோடி பற்றி அவதூறு பேசுவதாகவும், அனைத்து கூட்டணி கட்சி தலைவர்கள் பெயரையும் சொல்லி அழைப்பது அவரின் அன்பை காட்டுவதாகவும், தேவையில்லாத பேச்சுக்களை பேசி வாக்குவங்கிக்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் திமுகவை இனியும் மக்கள் நம்ப தயாராக இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேருந்தில் பயணித்த பயணிகளிடம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அங்கிருந்த டிபன் கடைக்கு சென்ற ஜி.கே.வாசன் பூரி சுட்டு கடை உரிமையாளரிடம் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து அங்கிருந்த மாலை கடைக்காரர் ஒருவர் அவருக்கு மாலை அணிவித்த போது தன்னுடைய உதவியாளரை அழைத்து அவரிடம் இருந்து வாங்கி மாலைக்காக, மாலைக்காக என கூறி கடைக்காரருக்கு பணம் கொடுத்தார். அங்கிருந்த செல்ல திரும்பிய பொது செய்தியாளர்களை கண்டு பதறி மாலைக்காக கொடுத்த பணம் அதனை கொச்சைபடுத்திவிடாதீர்கள் என விளக்கம் கொடுத்த ஜி.கே.வாசன் தொடர்ந்து பாஜக வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார். அப்போது கட்சி நிர்வாகிகள் சிலர் அவரிடம் மனு அளித்த நிலையில் ஆரணி பேரூராட்சியில் டாஸ்மாக் கடையை அகற்றிட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல உள்ளது என குற்றம் சாட்டினார்.
இதுதான் தமிழ்நாடு அரசின் மக்கள் பணி என்றார். இந்த பகுதியில் எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால் என கூறி பேசி உடனே வெற்றி பெறுவது உறுதி என்றும் அதற்கு பிறகு பொதுமக்களை திரட்டி இந்த டாஸ்மாக் கடையை மூடுவது முதல் பணி என உறுதி அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu