நகை வியாபாரியிடம் பணம் நகை வழிப்பறி செய்த 5 பேர் கொண்ட கும்பல் கைது
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே 175 சவரன் தங்க நகையை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹெல்மெட் கொள்ளையர்கள் 5 பேரிடமிருந்து 820 கிராம்,தங்க நகைகளை பறிமுதல் செய்து வெங்கல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சென்னை நெற்குன்றம் பகுதியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ராமேஸ்லால் என்பவர் கடந்த 25 ஆண்டுகளாக கனிஷ் நகைக்கடை நடத்தி வருகிறார்.இந்த கடை மூலம் சென்னை மற்றும் புறநகர் சுற்றியுள்ள சிறிய சிறிய நகை கடைக்கு நகைகளை விற்பனை செய்யும் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
அதேபோன்று திருவள்ளூர் மாவட்டம் மாதாவரம், வெங்கல், பூச்சி அத்திப்பட்டு ,தாமரைப்பாக்கம் ,பூந்தமல்லி ஆகிய இடங்களில் உள்ள சிறிய சிறிய நகை கடைக்கு வாரத்துக்கு ஒரு முறை தனது நகைக்கடையில் இருந்து நகைகளை கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மூலம் விற்பனை செய்தும் பணத்தை வசூலித்தும் வந்துள்ளார்
இந்நிலையில் கடந்த20ம் தேதி தனது நகை கடையில் விற்பனையாளராகபணியாற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சோகன்லால், காலூராம் இருவரும் இருசக்கர வாகனத்தில் 1400 கிராம் கொண்ட மூக்குத்தி கம்பல் வளையல் சரடு போன்ற முப்பதுக்கு மேற்பட்ட வகையான தங்க நகைகளை நெற்குன்றம் கடையிலிருந்து கொண்டு விற்பனைக்காக வழக்கமாக கொண்டு வந்துள்ளனர்.
அவர்கள் நெற்குன்றத்தில் இருந்து பாக்கம் கிராமத்தில் உள்ள நகை கடைக்கு நகையை கொடுத்துவிட்டுவசூலித்த ரொக்க பணம் 1,10,000,மீதியுள்ள 1.4 கிலோ மதிப்பிலான நகைகளை எடுத்து கொண்டு செங்குன்றம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது பூச்சி அத்திப்பட்டு காரணி பேட்டை இடைய சென்றபோது இவர்களை பின்னால் இரண்டு இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்த ஹெல்மெட் அணிந்து வந்த மூவர், நகையை வைத்திருந்த காலூராம் இடமிருந்து பிடுங்க முயற்சித்துள்ளனர். அப்போது காலூராம் கொடுக்க மறுத்ததால் வந்தவர்கள் பட்டாகத்தியை கொண்டு அவரை வெட்டி விட்டு 1.4 கிலோ நகை,1,10,000 ரொக்க பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்
இந்த,சம்பவம் தொடர்பாக நகைக் கடை உரிமையாளர் ராமேஸ்லால் வெங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்இதனை அடுத்து திருவள்ளுர் மாவட்ட கண்காாணிப்பாளர் சிபாஸ்கல்யாண் உத்தரவின் பேரில் ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பளர் கனேஷ்குமார் தலைமையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் நசரத்பேட்டை,திருநின்றவூர்,உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டியிருந்த சுமார் 200 மேற்ப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையில் குற்றவாளிகள் சென்னை பாலமேடு பகுதியில் பதுங்கி இருப்பாதாக வந்தரகசிய தகவலை அடுத்து தனிப்படை போலீசார் குற்றாவாளிகள் 5 பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர்
அவர்களிடமிருந்துசுமார் 820 கிராம் தங்க நகைகளையும் போலீசார் மீட்டனர் மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்திய Swift கார், 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருநின்றவூா் பகுதியை சேர்ந்தகமல் கிஷேர்(31), சென்னை பாலவேடு பகுதியை சேர்ந்த பாலாஜி(29), சுகுமார்(26), கிளிடோஸ்(29) தமிழ்மணி(28) என்பது தெரியவந்தது இதனை அடுத்து குற்றாளிகள் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu