வீட்டுக்குள் புகுந்து பெண்களை ஆயுதத்தால் தாக்கிய கும்பல்: சமூக வலைதளங்களில் வைரல்

வீட்டுக்குள் புகுந்து பெண்களை ஆயுதத்தால் தாக்கிய கும்பல்: சமூக வலைதளங்களில் வைரல்
X

பைல் படம்.

Today crime news முன்விரோதம் காரணமாக வீட்டுக்குள் புகுந்து பெண்களை அடித்த சம்பவம் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவருக்கும், கூவம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் என்பவருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாஸின் தரப்பு ஆட்கள் நேற்றிரவு திடீரென சார்லஸின் வீட்டுக்குள் புகுந்து வீட்டில் இருந்த சார்லஸ் மற்றும் அவரது மனைவி விக்டோரியா மகள் சவிதா மகன் சாருகேஷ் ஆகியோரை இரும்பு கட்டைகள் இரும்பு பைப்புகளை கொண்டு பயங்கரமாக தாக்கியுள்ளனர்.

Today crime news

இதில் அவரது மனைவி விக்டோரியா மகள் சவிதா ஆகியோர் தலையில் பலத்த ரத்த காயங்களோடு திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை அடுத்து சார்லஸின் வீட்டுக்குள் தாஸின் ஆட்கள் புகுந்து தாக்கி பொருட்களை அடித்து உடைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து சார்லஸின் சகோதரர் சத்தியமூர்த்தி மப்பேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரவு நேரத்தில் வீடு புகுந்து பெண்களை அடித்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!