திருவள்ளூர் பகுதியில் அடிக்கடி மின் தடை: மின்வாரிய அலுவலக உதவியாளர் மீது தாக்கு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காயமடைந்த மின்வாரிய கள உதவியாளர் குப்பன்
அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின் பகிர்மான அலுவலகம் உள்ளே புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கி பணியில் இருந்த கள உதவியாளரின் மண்டை உடைப்பு : அனைத்து தொழிற்சங்க மின் ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் மாவட்டம் முழுவதிலும் நேற்று அடிக்கடி மின்சாரம் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது, இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியுற்றனர்.இந்த நிலையில் காஞ்சிபுரம் மின் பகிர்மான மாவட்டம் திருவள்ளூர் கோட்டம் மணவாளநகர் இயக்குதல் மற்றும் பராமரித்தல் பிரிவில் இளநிலை பொறியாளர் காஞ்சனா, கள உதவியாளர் முரளிதரன் மற்றும் குகன் ஆகியோர் பணியில் இருந்தனர்
இதனையடுத்து மணவள நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றிரவு மின்சாரம் அடிக்கடி மின்தடை ஏற்பட்டது, இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் மணவள நகர் மின் பிரிவு அலுவலகத்தில் புகுந்து மேசையில் இருந்த கணினி மானிட்டர் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், அங்கே பணியில் இருந்த கள உதவியாளர் குப்பனிடம் மின்சாரத்தை அடிக்கடி ஏன் தடை செய்கிறாய் என கேட்டுள்ளனர் அதற்கு குப்பன் இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதே பிரச்னை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை ஏற்காத மர்ம கும்பல் மின்சாரம் தடை ஏற்படுத்துவதற்கு நீ ஏன் வேலை செய்கிறாய் என கோபத்துடன் ஒருமையில் பேசி அருகில் இருந்த மின் மீட்டரை எடுத்து தலையில் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதனால் படுகாயமடைந்த இரத்த வெள்ளத்தில் குப்பன் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார், இதனை அடுத்து மேலும் பணியில் இருந்த இளநிலை பெண் பொறியாளரை ஒருமையில் பேசி அசிங்கமாக திட்டிவிட்டு இனிமேல் மின் தடை ஏற்படுத்தினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த கள உதவியாளர் குப்பன் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தலையில் 10 தையல்கள் போடப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த நிலையில் மக்கள் சேவையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள மின் ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் உதவியாளரை தாக்கிய மர்ம கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து மின் தொழிற்சங்க நிர்வாகிகள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதனையடுத்து உதவி பொறியாளர் சதீஷ் சங்கர் மணவாள நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் அந்த புகாரில் அரசு அலுவலகத்தில் அனுமதி இன்றி உள்ளே புகுந்து மின்சார கள்ள உதவியாளரை சரமாரியாக தாக்கியதுடன் அலுவலகத்தில் இருந்த அரசின் சொத்துக்களை அடித்து நொறுக்கிய மணவள நகர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 6 பேர் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu