தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்
X
கடம்பத்தூர் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் நரசிங்கபுரம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் அடிக்கடி தொடர் அடிதடி வழக்கில் ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில் அபிமன்யுவை மப்பேடு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் துணை ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இவர் மீது மப்பேடு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ளது.

எனவே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அபிமன்யுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அபிமன்யுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அபிமன்யு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story