வேப்பம்பட்டு அருகே பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம்

வேப்பம்பட்டு அருகே பெருமாள்பட்டு இரட்டை குளம் பகுதியில் உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
-திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே பெருமாள்பட்டு இரட்டை குளம் பகுதியில், உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் 1000-ம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் சிறப்பு முகாம் ஆர்.டி..பாலாஜி தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக செவ்வாப்போட்டை காவல் ஆய்வாளர் டில்லிபாபு கலந்து கொண்டு கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கினார். மேலும் கண்புரை மற்றும் பார்வை குறைபாடு போன்ற அனைத்து கண் நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. முகாமில் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் பெருமாள்பட்டு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை ஊக்குவித்து சிறப்பாக பணியாற்றிய அரசு பள்ளி ஆசிரியர்களை பாராட்டி தொண்டு நிறுவனம் சார்பில் நல்லாசிரியர் விருதுகளும், சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவிகரம் தொண்டு நிறுவன கிளை தலைவர் வாசு, கௌரவ தலைவர் ஆர். டி செயலாளர் ராமசந்திரன், மகளிர் அணி தலைவி அருள்மொழி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்.சீனிவாசன், கூட்டுறவு சங்கத் தலைவர் இரா.வாசு, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.நந்தகுமார், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி மற்றும் உதவிகரமாக தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu