ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்
ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் இந்தியன் ரெட் கிராஸ் திருவள்ளூர் மாவட்ட கிளை சார்பில் உலக ரெட் கிராஸ் தினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் வெங்கடேஸ்வரா மருத்துவமனை இணைந்து ஆரணியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கிளைத் தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சார் ஆட்சியர் செல்வி ஐஸ்வரியா, மற்றும் ஊத்துக்கோட்டை டிஎஸ்பி கணேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வை ஆரணி பேரூராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி. மற்றும் டாக்டர் நாராயணபாபு, டாக்டர் ப்ரொபோஸர் முனியப்பன், பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
உலக ரெட் கிராஸ் தினத்தை முன்னிட்டு நலிவடைந்த ஏழை எளியவர்களுக்கு 20 பேருக்கு நலத்திட்ட உதவிகளையும், மற்றும் பேரூராட்சி துப்புரவு தூய்மை பணியாளருக்கு 50 பேருக்கு கையுறையும் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர் இதில் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினரும் 20க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாத்திரை மருந்துகளை இலவசமாக வழங்கப்பட்டது.
பொன்னேரி வட்டக்கிளை நிர்வாகிகள் சேர்மன் கோபால், வைஸ் சேர்மன் சுரிந்தர், பொருளாளர் வழக்கறிஞர் சுரேஷ் லட்டு குமார். ஹெல்த் கமிட்டி சேர்மன் சஞ்சீவி, மற்றும் ஆரணி காவல்துறை உதவி ஆய்வாளர் பாஸ்கர், பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமார், வார்டு உறுப்பினர்கள் கண்ணதாசன், குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி நிறைவாக பொன்னேரி வட்ட கிளை செயலாளர் சித்ரா சுரிந்தர் நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu