ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி; நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்ட மக்கள் மனு
பாதிக்கப்பட்ட நெய்வேலி மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
பெரியபாளையம் அருகே அருகே ஏலச்சீட்டு நடத்தி 3கோடி ரூபாய் பணத்தை ஏமாற்றி ஊரை விட்டு தப்பி சென்ற நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாதிக்கப்பட்ட50-க்கு மேற்பட்டோர் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நெய்வேலி கிராமத்தை சார்ந்தவர் ரமேஷ் இவர் அதே கிராமத்தில் மளிக கடையோடு ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் அக்கிரமத்தை சார்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் 1.லட்சம் முதல்3 லட்சம் வரை ச்சீட்டு கட்டி வந்தனர் ச்சீட்டு எடுத்தவர்களுக்கு முறையாக பணம் தராது ஏமாற்றி வந்ததாகவும் இதனால் அப்பகுதி மக்கள் தாங்கள் கட்டிய பணத்தை திருப்பி தருமாறு கட்டாய படுத்தியதை அடுத்து திடீரென ரமேஷ் அப்பகுதி மக்கள் கட்டிய சீட்டு ரூபாய்3.போடி பணத்தை சுருட்டிக்கொண்டு ஏமாற்றி ஊரை விட்டு மாயமானார்.
இந்த நிலையில் இதனை அறிந்த அவரிடம் ச்சீட்டு கட்டி பாதிக்கப்பட்ட நபர்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவிக்கையில் நெய்வேலி கிராமத்தில் வசிக்கும் பலர் கூலி வேலைக்கு, 100 நாள் வேலைக்கு, கட்டிட கூலி தொழில் செய்து சம்பாதித்த பணம் குடும்பத் தேவைக்கு போக சிறு சிறுவாக சேர்த்து வைத்த பணம் தாங்கள் குடும்ப கஷ்டங்களையும் இருந்து வெளியேற ரமேஷிடம் சீட்டு கட்டியதாகவும், அந்த பணத்தை ரமேஷ் எடுத்துக்கொண்டு ஊரை விட்டு எங்கே சென்றார் என்றும் தெரியவில்லை எனவும், இது குறித்து9.09.2024 பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்று கூடி பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றதாக ஆனால் தொகை அதிகமாக இருப்பதால் இந்த புகாரை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் நீங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இடம் சென்று மனு அளியுங்கள் என பெரியபாளையம் காவல் துறையினர் திருப்பி அனுப்பியதாகவும், என்ன செய்ய வேண்டும் திக்கு தெரியாமல் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்ததாகவும், எனவே சீட்டு நடத்தி பணம் ரூபாய் 3.கோடி வரையிலான பணத்தை ஏமாற்றி ஊரை விட்டு சென்ற ரமேஷை கண்டுபிடித்து அவரிடம் இருந்து பணத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாங்கித் தருமாறு கண்ணீர் மலக கோரிக்கை விடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu