பெரியபாளையம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி மோசடி: நடவடிக்கைகோரி போராட்டம்

பெரியபாளையம் அருகே தீபாவளி  சீட்டு  நடத்தி மோசடி: நடவடிக்கைகோரி  போராட்டம்
X

 திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தீபாவளி சீட்டு பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தீபாவளி சீட்டு கட்டியவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த மலந்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜோதி. இவர் வெங்கல் அடுத்த தாமரைப்பாக்கம் கூட்டுறவு சங்கத்தில் அலுவலகம் அமைத்து தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் தீபாவளி சீட்டில் சேர்ந்த மாதம் ₹.1,000, 4 கிராம் தங்கம், 40 கிராம் வெள்ளி பொருட்கள், மாதம் ₹.500 என்றால் 2 கிராம் தங்கம் மற்றும் இனிப்பு., பட்டாசு, ஆடை, உள்ளிட்ட இதர பொருட்களும் வழங்கப்படும். இதில் வெளியூர், வெங்கல், தாமரைப்பாக்கம் செம்பேடு, சேத்துப்பாக்கம், பூவலம்பேடு, குருவாயல் உள்ளிட்ட10.க்கு மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பணம் செலுத்தியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் அலுவலகத்தை பூட்டிவிட்டு, சீட்டு போட்ட மக்களை அலைக்கழித்து மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ளதாக ஆகிவிட்டாராம். இதையடுத்து தாமரைப்பாக்கம் வளாகத்தில் உள்ள அலுவலகம் முன்பு பொதுமக்கள் திரண்டனர். ஜோதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை தீபாவளி சீட்டு பாதிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாணிடம் புகார் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..





Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!