தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்

திருவள்ளூரில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம்.
திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் கு.நல்லதம்பி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு தேமுதிக வேட்பாளருடன் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, பா.பென்ஜமின், மாதவரம் மூர்த்தி,, அப்துல் ரஹீம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சிறுணியம் பலராமன், அலெக்ஸாண்டர் மற்றும் முன்னாள் எம்பி., வேணுகோபால் ஆகியோர் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அதன்படி திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரிக்க திருவள்ளூர் வந்தார்.
திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகே நடைபெற்ற பிரம்மாண்ட கூட்டத்தில் பங்கேற்றார். புரட்சி பாரத கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தியார் அவர்கள் வாக்கு சேகரித்தார்
அதனைத் தொடர்ந்து அதிமுகவின் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில்,
தேமுதிகவின் வெற்றி வேட்பாளர் நல்லதம்பிக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் தொடர்ந்து அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் நிராகரித்த அரசு விடியோ தி மு க அரசு என்றும் மத்திய அரசு வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து அதிகமான விலைகள் பெட்ரோல் விலையை உயர்த்தி மக்களை வஞ்சிக்கிற அரசு மாநில அரசு என்றும் இடியா திமுக அரசு வந்தபோது மக்களுக்கு விவசாயிகளுக்கு தொழிலாளர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் குளங்கள் அனைத்தையும் தூர்வாரப்பட்டது அதிமுக ஆட்சியில் தான் ஆனால் திமுக அரசு எங்களுடன் திட்டங்களை அனைத்தையும் நிராகரித்துவிட்டது சென்ற இடத்தில் எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி துப்பாக்கி சூடு நடத்தினார் என்று கூறி வருகிறார் மு க ஸ்டாலின் அவர்கள் இந்த துப்பாக்கிச் சூடு காரணமே பல அரசியல் கட்சிகள் தான்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது விவசாயிகளுக்கு பம்ப்செட்டுக்கு அவருடைய மின் கட்டணத்திற்கு ஒரு ரூபாய் குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம் செய்தார்கள் அப்பொழுது கோவையில் அந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தின அரசாங்கம் தான் திமுக அரசாங்கம் விவசாயிகளை குருவி சுடுவது போல் சுட்டது தான் திமுக அரசு என்றும் ஸ்டாலின் ஆட்சியில் தான் நடந்தது என்று தெரிவித்தார்.
அந்த போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குடும்பங்கள் வறுமையில் இருந்ததால் அம்மா முதலமைச்சராக இருந்தபோது அந்த துப்பாக்கிச்சூட்டில் இருந்த விவசாய குடும்பத்திற்கு 5 லட்சம் கொடுத்தது அம்மா அரசு என்று தெரிவித்தார் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை தோட்டம் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு உயர்த்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சந்திக்க ஊர்வலமாக சென்ற போது அவர்கள் மீது கடுமையான தடியடிகள் நடத்தி அவர்கள் உயிருக்கு பயந்து அருகில் ஓடிக் கொண்டிருக்கும் தாமிரபரணி ஆற்றில் விழுந்து 18 பேர் உயிரை இழந்தனர்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பல துப்பாக்கி சூடுகள் நடைபெற்று உள்ளது சட்டமன்றத்தில் அனைத்தையும் நான் பதிவு செய்துள்ளேன் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய திரு ஸ்டாலின் அவர்கள் அந்த ஆலை விரிவாக்க செய்வதற்கு 1500 கோடி ஒதுக்கீடு செய்வது ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார் 86 ஏக்கர் ஸ்டாலின் அவர்கள் கொடுத்தார் ஆலை விரிவாக்கம் செய்வதில் திமுக அரசு துணை போனது ஸ்டெர்லைட் ஆலையை மூடப்பட்டது அதிமுக ஆட்சியில் தான்,
திமுக ஆட்சியில் கொலை கொள்ளை திருட்டு வழிப்பறி பாலில் வன்கொடுமை தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எனவே வாக்களியுங்கள் முரசு சின்னத்திற்கு. பிரமாண்ட மருத்துவ கல்லூரி அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது திருவள்ளூரில் என்று அவர் தெரிவித்தார் இந்த பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu