கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 10,அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர்களின் சங்கத்தின்சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது மாவட்டத் தலைவர் சிவா தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் 10 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்த சத்துணவு ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், கிராம பணியாளர்களுக்கு வழங்கப்படுகிற ரூபாய் 6750 பென்சன் தொகையை சத்துணவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்ற வேண்டும், காலி பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும்,
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் காலை சிற்றுண்டி உணவு வழங்குவதை நிறுத்தப்பட்டு, சத்துணவு மையங்களில் சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும் எனவும்10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் அரசின் அனைத்து துறை காலி பணியிடங்களில் 50% முன்னுரிமை அளிக்க வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட பொருளாளர் குணசுந்தரி,வெங்கடேசன், மாலா, மலர்கொடி, ஓம் சக்தி சுப்பிரமணி, கருணாகரன், குமார், விநாயகம், வனிதா, தேன்மொழி, வளர்மதி, காந்திமதி, ராமமூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு, இதுகுறித்த கோரிக்கை மனு, கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu