ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் திடீர் ஆய்வு
சோதனையில் ஈடுபட்ட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.
Food Safety Department -தொடர் ரேஷன் அரிசி கடத்துவார்கள் மீது நீதிமன்றத்தில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்த பின்னால் அவர்கள் சொத்துக்கள் வங்கி கணக்கில் முடக்கம் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு தொடர் ரேஷன் அரிசி கடத்தப்படுத்து வரும் தகவலை தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தமிழக ஆந்திரா எல்லையென ஊத்துக்கோட்டை சோதனை சாவடியில் உணவு பாதுகாப்பு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின் செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், நியாய விலைக் கடையில் இலவச பொருட்கள் தேவை இல்லை என்றால் பொதுமக்கள் வாங்க வேண்டாம் எனவும் வாங்கி மற்றவருக்கு விற்பதை தவிர்க்க வேண்டும் என கூறினார்.
தமிழகத்தில் நேற்றைய தினம் வரை நேரடி கொள்முதல் நிலையம் 492 திறந்து வைக்கப்பட்டு இருப்பதாகவும், கடந்த மே மாதம் முதல் தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 3.65 மெட்ரிக் டன் ரேஷன் அரிசிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், அதில் 11 ஆயிரத்து 8 வழக்கு பதிவு செய்து 11 ஆயிரத்து 121 கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், அதில் 113 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் 63 பேர் கைது செய்யப்பட்டு அதில் 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர் ரேஷன் அரிசி பொருட்கள் கடத்துவர்கள் மீது நீதிமன்ற குற்ற வழக்கு பதிவு செய்த பின் அவர்களை சொத்துக்கள் வங்கி கணக்கில் முடக்குவது குறித்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu