பெரியபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

பெரியபாளையத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு
X

பெரியபாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு

பெரியபாளையம் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தரமற்ற உணவு தயாரித்த மூன்று கடைகளுக்கு அபராதம் விதித்தனர்

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் புகழ்பெற்ற பவானி பவானி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் இருந்தும் சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்.

இந்தியன் 2 படத்தில் யார் யார் நடித்திருக்கிறார்கள் தெரியுமா?

இந்த நிலையில் வருகின்ற 17ஆம் தேதி ஆடி மாதம் கோவிலில் திருவிழா தொடர்ந்து 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறும். ஆடி மாதம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பெரியபாளையத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கோவிலுக்கு வரும் பொதுமக்களின் நன்மை கருதி அவர்கள் வெளியே சாப்பிடும் உணவுகள் தரமாக உள்ளதா அதனை உறுதி செய்யும் வகையில் பவானி அம்மன் கோவில் சுற்றி அமைந்துள்ள உணவகங்களில், குளிர்பான கடைகளில், மற்றும் பெரியபாளையம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆலயத்தில் நாள்தோறும் அன்னதானம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த உணவை நன்றாக இருக்கின்றதா என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்.

இதன் பின்னர் பெரியபாளையம்பஜார் வீதியில் உள்ள ஓட்டல்கள், பேக்கரிகள், கடைகள்,ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்,தள்ளுவண்டி கடைகள்,சாலை ஓர உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி சதீஷ்குமார் உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் எல்லாபுரம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அதிகாரி கார்மேகம் கடை,கடையாக சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்தியன் 2 திரைவிமர்சனம் - அனல் தெறிக்கும் ஆக்‌ஷன் விருந்து!

அப்பொழுது பல்வேறு கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த காலாவதியான சிக்கன் பிரியாணி, பீப் பிரியாணிகளில், அளவுக்கு அதிகமான அளவில் உடலுக்கு கேடு விளைவிக்கும் அனுமதி அளிக்கப்படாத வண்ணம் சேர்க்கப்பட்டிருந்தது.

இதேபோல் ஃபாஸ்ட் ஃபுட் கடையிலும் வறுக்கப்பட்ட கோழி இறைச்சியில் அதிக அளவில் வண்ணம் சேர்க்கப்பட்டிருந்ததை கண்டறிந்த அதிகாரிகள் சுமார் 50 கிலோ கோழி இறைச்சி, 25 கிலோ மாட்டு இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்து அழித்தனர்.

இந்தியன் 2 படத்துக்கு இத்தனை கோடி செலவா? பட்ஜெட் எகிறிடுச்சே!

மேலும்,மூன்று கடைகளில் தடை செய்யப்பட்ட10 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பிளாஸ்டிக் பைகள் மறைத்து பயன்படுத்தியதால் தலா ரூ.2,000-ம் விதம் மொத்தம் ரூ.6,000-ம் அபராத தொகையை வசூல் செய்தனர்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி திடீர் ஆய்வு செய்த சம்பவம் பெரியபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!