பலத்த மழையால் வெள்ள நீரில் மூழ்கியது மதுரவாயல்-நௌம்பூர் தரைப்பாலம்

பலத்த மழையால் வெள்ள   நீரில் மூழ்கியது மதுரவாயல்-நௌம்பூர் தரைப்பாலம்
X
வெள்ளநீரில் மூழ்கிய மதுரவாயல் -நௌம்பூர் பாலம்.
மதுரவாயல்-நௌம்பூர் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

மதுரவாயல்-நௌம்பூர் செல்லக்கூடிய கூவம் தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. தரைப்பாலத்தின் மீது வெள்ளம் கரை புரண்டோடி வருகிறது.

சென்னையில் கன மழை காரணமாக ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி காட்சியளித்து வரக்கூடிய சூழலில் மதுரவாயல் முதல் நௌம்பூர் செல்லக்கூடிய தரைப்பாலம் தற்பொழுது வெள்ள நீரில் முற்றிலுமாக மூழ்கியது. மேலும் தரைப்பாலத்தின் மேல் மழை நீர் கரை புரண்டு ஓடி வருகிறது.

குறிப்பாக ஆபத்தை தவிர்க்கும் விதமாக தரை பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்லாத வகையில் மதுரவாயல் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது குறிப்பாக இதற்கு முன்பு கடந்த வருடம் இந்த தரைப்பாலத்தில் வெள்ளத்தில் சிக்கி சிலர் உயிரிழந்த சம்பவமும் நடந்துள்ள காரணத்தால் தற்போது போலீசார் இந்தப் பகுதியை யாரும் கடந்து செல்லாதபடி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த தரைப்பாலத்தின் அருகே புதிதாக மேம்பாலம் கட்டும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. அந்த பணி பாதி முடிந்துள்ள நிலையில் முழுமையாக முடியும் பட்சத்தில் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு இந்த சிரமம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!