திருவள்ளூர் அருகே ரசாயன கழிவு நீரால் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

ஏரியில் மீன்கள் செத்து மிதக்கிறது. அதனை இளைஞர் ஒருவர் கையில் தூக்கி காட்டுகிறார்.
தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் 5 டன்னுக்கும் மேலாக மீன்கள் செத்து மிதக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ஊராட்சி ரயில்வே இருப்புப் பாதை அருகே புட்லூர் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை நம்பி 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஏரியில் வளர்க்கப்படும் மீன் ஆண்டுதோறும் ஏலம் விடுபட்டுவதன் மூலம் குறிப்பிட்ட தொகை ஊராட்சிக்கு வருவாய் ஈட்டப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து புட்லூர் ஊராட்சி சுற்றிலும் பல தொழிற்சாலைகள் அமைந்துள்ள நிலையில் தொழிற்சாலையில் இருந்து ரசாயன கழிவுகள் முறையாக வெளியேற்றப்படாமல் சேமித்து வைக்கப்பட்டு மழைக் காலங்களில் மழை நீருடன் ஏரியில் கலந்து வருகிறது. இதன் காரணமாக ஆண்டு தோறும் மழை காலங்களில் இது போன்று ரசாயனகழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்து திறந்து விடப்பட்டு ஏரியில் கலக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான மீன்கள் ஏரியில் செத்துக்கிடந்து துர்நாற்றம் வீசி வருகிறது.
இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டிய அரசு அதிகாரிகள் பெயரளவிற்கு ஆண்டுதோறும் மீன்கள் செத்து மடியும் போதெல்லாம் தற்காலிகமாக நடவடிக்கை எடுப்பதாக கூறிவிட்டு செல்கின்றனர்,
ஆனால் இதுவரை எந்த ஒரு நிரந்தர நடவடிக்கைகளும் எடுக்கப்படாதல்தான் ஆண்டுதோறும் புட்லூர் ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மடியும் அவலம் தொடர்கிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு ரசாயனக் கலவை ஏரியில் கலப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu