திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிபத்து ஒத்திகை

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீவிபத்து  ஒத்திகை
X

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் ஊழியர்களுக்கு தீயணைப்பு பயிற்சி அளிக்க்கப்பட்டது 

திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பாணை கொண்டு தீயை அணைக்கும் ஒத்திகை நடைபெற்றது

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பாஸ்கரன் உத்தரவின் பெயரில் நிலை அலுவலர் இளங்கோவன் முன்னிலையில் தீயணைப்பாணை கொண்டு எவ்வாறு தீயை அணைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது

தீயணைப்பானை எந்த முறையில் கையிலெடுத்து பயன்படுத்த வேண்டும் எனவும் தீயணைப்பு துறையினர் ஒத்திகை செய்து காட்டினர். அதைத்தொடர்ந்து மருத்துவர் செவிலியர் துப்புரவு பணியாளர்களுக்கு மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அச்சப்படாமல் தீயை அணைப்பது விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்


Tags

Next Story