ரஜினிகாந்த் பூரண குணமடைய ரசிகர்கள் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு பூஜை

ரஜினிகாந்த் பூரண குணமடைய ரசிகர்கள் ராகவேந்திரா கோவிலில்  சிறப்பு பூஜை
X

ரஜினிகாந்த் ரசிகர்கள் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினர்.

நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி திருவள்ளூரில் அவரது ரசிகர்கள் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு பூஜை.செய்தனர்.

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி திருவள்ளூரில் அவருடைய ரசிகர்கள் ராகவேந்திரா கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர்.

தமிழ் திரைப்பட உலகின் உச்ச நட்சத்திரமாக பல கோடி ரசிகப் பெருமக்களை கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த நான்கு நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற திருவள்ளூர் நகரச் செயலாளர் ஆர்.ஜி. மார்த்தாண்டன் தலைமையில் சிறப்பு பூஜை திருவள்ளூர் வீரராகு கோவில் அருகில் உள்ள ராகவேந்திரா சுவாமி திருக்கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவாக குணமடைந்து விரைவில் அவர் வீடு திரும்ப வேண்டும் தொடர்ந்து அவருடைய சிரிப்பை நாங்கள் காண வேண்டும் என்று திருவள்ளூர் நகரச் செயலாளர் ஆர்.ஜி. மார்த்தாண்டன் தெரிவித்தார்.இந்த சிறப்பு பூஜையில் ரசிகர்கள் கோபி ,பாஸ்கர் ஆனந்த பாபு ,விஜய் பாஸ்கர், மணி பவன், சிவா, சிவா ,பிரகாஷ் ப்ரீத்தி, பத்து ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு