திருவள்ளூர் அருகே உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் கண் பரிசோதனை முகாம்

திருவள்ளூர் அருகே உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் கண் பரிசோதனை முகாம்
X

கண் பரிசோதனை முகாமில் கண்ணாடி வழங்கப்படும் காட்சி.

திருவள்ளூர் அருகே 500 ஏழை, எளிய மக்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு அருகே பெருமாள்பட்டு இரட்டை குளம் பகுதியில் உதவிகரம் தொண்டு நிறுவனம் சார்பில் 500 ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டு, இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் முகாம் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இம் முகாமில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தாசில்தார்.தமிழ்ச்செல்வன், திருவள்ளூர் அரசு மருத்துவமனை கண்மருத்துவர் டாக்டர்.ஹேமாவதி ஆகியோர் கலந்து கொண்டு கிட்டப்பார்வை, தூரப்பார்வை உள்ளவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கினர்.

மேலும் கண்புரை மற்றும் பார்வை குறைபாடு போன்ற அனைத்து கண் நோய்களுக்கும் இலவச பரிசோதனை செய்யப்பட்டு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டது. மேலும் அன்னையர் தினத்தையொட்டி பெருமாள்பட்டு பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் ஏழை, எளிய மாணவர்களை தேர்வு செய்து அந்த மாணவ, மாணவியர்களை அரசு கல்லூரியில் படிக்கும் வரை அனைத்து கல்வி செலவுகளையும் உதவிகரம் தொண்டு நிறுவனம் ஏற்றுக் கொண்டது.

மேலும் அன்னையர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட ஓவிய போட்டியில் வென்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உதவிகரத்தின் நிறுவனர் வடிவேலன், மகளிர் அணி தலைவி அருள்மொழி மற்றும் உதவிகரம் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உட்பட ஏராளமான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!