திருவள்ளூரில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா: கேக் வெட்டி கொண்டாட்டம்

திருவள்ளூரில் சமத்துவ கிறிஸ்மஸ் விழா: கேக் வெட்டி கொண்டாட்டம்
X

திருவள்ளூரில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்த சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

திருவள்ளூரில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்மஸ் விழாவில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடினர்.

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா இது விமர்சையாக நடைபெற்றது. வருகிற டிசம்பர் 25.ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் திருவள்ளூரில் இந்து, முஸ்லீம்,புத்த மத வகுப்பினர் கலந்து கொண்ட சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியானது திருவள்ளூர் மாவட்ட செயலாளர் ஜோஸ்வா எபினேசர் ஏற்பாட்டிலும், பொது செயலாளர் போதகர்,பால் தயாநிதி,மற்றும் மண்டல செயலாளர் அந்தோனி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக

திமுக கட்சி சார்பில் நகர் மன்ற தலைவர் உதய மலர் பாண்டியன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் துணைத் தலைவர் சசிகுமார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் யாசின் மௌலானா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், ஆர்.சி.மறை மாவட்ட பங்குதாரர் கிளமென்ட் பாலுச்சாமி ,TELC ஆயர் எலன் கென்னடி, எஸ்.பி. சி மாவட்டச் செயலாளர் ஜார்ஜ் விக்டர் ஆகியோர்பங்கேற்று கொண்டு கேக் வெட்டியும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு சமத்துவ கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அனைத்து சமுதாயத்தை சார்ந்த மக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story
ai powered agriculture