திருவள்ளூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த கலெக்டர்

திருவள்ளூர் வாக்குச்சாவடியில் வாக்களித்த  கலெக்டர்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் கலெக்டர் பொன்னையா வாக்கு பதிவு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4902 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் பொன்னையா தனது வாக்கினைப் பதிவு செய்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 2615 வாக்குச்சாவடி மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க படுவதாக ஆட்சியர் பேட்டி அளித்தார்.

மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா வட்டாட்சியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து சரியாக 7மணி அளவில் கலெக்டர் பொன்னையா வரிசையில் நின்று வாக்களித்தார். முன்னதாக அவருக்கு கையுறை, சானிடைசர் வழங்கப்பட்டது. வெப்பமானி மூலம் பரிசோதனை செய்த பின் தனது வாக்கினை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 627 பதட்டமான வாக்குச்சாவடி,

15 மிகவும் பதட்டமான வாக்குச்சாவடி உள்ளிட்ட 2615 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா மூலம் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் மாவட்டத்தில் உள்ள 4902 வாக்குச்சாவடி மையங்களிலும் சுமுகமான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாகவும் ,இயந்திர கோளாறு ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க தயார் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!