/* */

திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.3 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.3 லட்சம் பறிமுதல்
X

திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்ட பறிமுதல் பணம்.

வரும் 19ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவள்ளூர் அருகே ஈக்காடு பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சென்னையிலிருந்து திருவள்ளூர் நோக்கி வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில் காரில் திருவலாங்காடு பகுதியைச் பச்சையப்பன் என்பவர் உரிய ஆவணங்களின்றி மூன்று லட்சம் ரூபாய் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது.

அதை தொடர்ந்து அந்த மூன்று லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றிய திருவள்ளூர் நகராட்சியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க பட்டால் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் காண்பிக்கப்படாத பட்சத்தில் அரசு கருவூலத்திற்கு பணம் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 3 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    SavukkuShankar கைது சரியா ? நச்சுனு பதில் சொன்ன மக்கள்...
  2. வீடியோ
    🔴LIVE : ஜம்மு காஷ்மீர் விவகாரம் | வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்...
  3. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  4. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  5. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  6. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  7. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  9. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்