/* */

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி

பெரியபாளையம் அருகே ராள்ளபாடி தனியார் பள்ளி மாணவர்கள் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே பள்ளி மாணவர்கள் சார்பாக தேர்தல் விழிப்புணர்வு பேரணி
X

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே தனியார் பள்ளி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே ராள்ளபாடி கிராமத்தில் தனியார் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது.இந்நிலையில், இம்மாதம் 19-ம் தேதி நடைபெறும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் இப்பள்ளி மாணவர்களின் சார்பாக 18-வது மக்களவை பொதுத் தேர்தலில் நூறு சதவிகித வாக்குப்பதிவின் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சியும்,பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணியும்,துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சிகளுக்கு,தனியார் மேல்நிலைப் பள்ளியின் நிறுவனரும்,தாளாளாருமான டாக்டர் இ.ஏகாம்பரம் தலைமை தாங்கினார்.அனைவரையும் பள்ளியின் முதல்வர் ஜெ.இ.ரஞ்சித்குமார் வரவேற்றார். ஊத்துக்கோட்டை தனி வட்டாட்சியர் வெண்ணிலா, பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்(பயிற்சி) ஆஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில்,சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் இ.மதன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில்,சிறப்பு விருந்தினராக கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதியின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வி.கணேஷ் கலந்து கொண்டு நமது இலக்கு 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற உறுதி மொழியை வாசித்தார்.

பின்னர், பெரியபாளையம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகே இருந்து மாணவர்களின் தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பெரியபாளையம் வருவாய் ஆய்வாளர் கீதா,ராள்ளபாடி கிராம நிர்வாக அதிகாரி சீனிவாசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.முடிவில்,பள்ளியின் இயக்குனர் பி.எபினேசர் நன்றி கூறினார்.

Updated On: 4 April 2024 2:09 PM GMT

Related News