சொத்து பிரச்சினையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்

சொத்து பிரச்சினையில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை; உறவினர்கள் சாலை மறியல்
X

பைல் படம்.

மேலகொண்டையார் பகுதியில் சொத்து பிரச்சினையில் உறவினர்கள் தாக்கிய அவமானத்தில் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூரை அடுத்த மேலகொண்டையார் கிராமத்தை சேர்ந்தவர் பாபு (55) விவசாயம் செய்து வந்துள்ளார். இவரது சகோதரர் பக்தவச்சலவிற்கும் பாபுவிற்கும் சொத்து பிரச்சினை காரணமாக பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கர்ப்பிணியாக உள்ள மகள் சித்ராவை சீமந்த விழா நடத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் பாபு.

இதனதை்தொடர்ந்து, பாபுவின் சகோதரர் பக்தவச்சலம் அவரது மனைவி தாரணி, மகன்கள் அஜித் குமார், சக்தி ஆகியோர் சேர்ந்து பாபுவின் வீட்டிற்கு வந்து சொத்துப் பிரச்சனை காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ஏற்பட்ட கைகலப்பில் பக்தவச்சலத்தின் மனைவி தாரணி பாபுவை செருப்பால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் அவமானம் தாங்காமல் பாபு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து பாபுவின் மனைவி காஞ்சனா எனது கணவரின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டி வெங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். ஆனால், 24 மணி நேரம் ஆகியும் போலீசார் யாரையும் கைது செய்யாததால் மனைவி காஞ்சனா மகள்கள் மற்றும் உறவினர்கள் சென்று சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என பாக்கம் வெங்கல் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை கைது செய்வதாக கூறி உறுதி அளித்ததன் பேரில் பின்பு மறியலை கைவிட்டனர்.

Tags

Next Story
காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி..!