எம்எல்ஏ ஆய்வு எதிரொலி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்

எம்எல்ஏ ஆய்வு எதிரொலி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரம்
X

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் தூய்மை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் எஸ். சந்திரன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு மேற்கொண்டார். பேரூராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து பொது சுகாதாரம், தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம் குறித்து வீதிவீதியாக சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பொதுமக்கள் தெருக்களில் வீடுகளுக்கு அருகில் குப்பைகள் தேங்கி நிற்பதாகவும் குடிநீர் வீணாக வருவதாக பொதுமக்களிடமிருந்து வந்த புகார்களை அடுத்து உடனடியாக தூய்மை பணிகள் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் பிரதான சாலைகள் சுத்தமாகவும், தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து பேரூராட்சி செயல் அலுவலர் ஜெ.பிரகாஷ் முன்னிலையில் நேற்று திருத்தணி சாலை, பேருந்து நிலையம் அத்திமாஞ்சேரிபேட்டை, பள்ளிப்பட்டு ஆகிய சாலைகளில் தேங்கி நின்ற குப்பை கழிவுகளை ஜேசிபி எந்திரம் கொண்டு சுத்தப்படுத்தப்பட்டது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் தூய்மைப் பணியாளர்கள் கொண்டு சுத்தப்படுத்தி அனைத்து சாலைகளிலும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கப்பட்டது‌.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் குப்பை கழிவுகள் குறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்தார். அவருடன் பேரூராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!