திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

திருவள்ளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Awareness -திருவள்ளூரில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Awareness - திருவள்ளூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு டில்லிபாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து திருவள்ளூர் பஸ் நிலையம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைகளில் பதாகைகளை ஏந்தி போதைப்பொருட்கள் வேண்டாம் போதைப்பொருட்களை ஒழிப்போம் என கோஷமிட்டனர்.

மேலும் போதை பொருள்களால் ஏற்படும் நோய்கள் அவற்றால் ஏற்படும் உயிர்ச்சேதங்கள் குறித்து காஞ்சிபுரம் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவின் துணை போலீஸ் சூப்பிரண்டு டெல்லி பாபு துண்டுபிரசுரம் விநியோகம் செய்தார்.

இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் வசந்தி, ரயில்வே காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, திருவள்ளூர் உதவி ஆய்வாளர்கள் வெங்கடேசன், ரவிச்சந்திரன், சிவகுமார் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!