இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

போதை பொருள் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

ஆரணியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே ஆரணி அரசு மேல்நிலை ப்பள்ளியில் பயிலும் மாணவி, மாணவர்களுக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆரணி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளூர் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அறிவுறுத்தல் படி பொன்னேரி வட்டக் கிளையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கிடையே போதை பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கவிதைப்போட்டி, ஓவியப் போட்டி,பேச்சுப்போட்டி,கட்டுரைப்போட்டி, உள்ளிட்ட போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கும் விழா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட தொடர்பு அலுவலர் ஏழுமலை வரவேற்பு உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களிடையே போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு குறித்து அதில் நமக்கு எவ்விதம் கேடு விளைவிக்கும் உள்ளிட்ட அம்சங்களை குறித்து சிறப்புரை ஆற்றினார். பின்னர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பெரியபாளையம் காவல் துறை ஆய்வாளர் வெங்கடேசன், இந்தியன் ரெட் கிராஸ் பொன்னேரி வட்டக்கிளை சேர்மன் கோபால்,உட்பட உறுப்பினர்களும்,பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஏகாம்பரம், காவேரி,இருபால் ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி நிறைவாக வட்ட கிளை செயலாளர் சித்ரா சுரேந்தர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு