திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தை ரத்து செய்ய ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
Drivers Association Agitation
திருத்தப்பட்ட புதிய குற்றவியல் சட்டத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து வாகன ஓட்டுநர்கள் தொழிற்சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஓட்டுனர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகும் Hit & Run (ஹிட் & ரன்) சட்ட திருத்த மசோதாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,சாலை விதிகள் தொடர்பான விழிப்புணர்வு பள்ளி பாடத்திட்டத்திலேயே ஏற்படுத்த வேண்டும் லோடு ஏற்றும் மற்றும் இறக்கி வைக்கப்படும் இடங்களில் டிரைவர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்
ஓட்டுனர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தி தர வேண்டும், ஓட்டுநர்களுக்கு தபால் ஓட்டு உரிமை வழங்க வேண்டும்,இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் சார்பில் கையில் பதாகைகளை ஏந்தியவாறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.ஒன்றிய அரசை கண்டித்தும்மேலும் ஓட்டுனர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu