கொரோனா நிவாரண நிதி வழங்கும் இடத்தில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்

கொரோனா நிவாரண நிதி வழங்கும் இடத்தில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்
X
பெருமாள்பட்டு நியாயவிலை கடையில் கொரோனா முதல் தவணை நிவாரணம் வழங்கும் பகுதியில் அதிமுகவினரை தாக்கிய திமுகவினர்

திருவள்ளுர் அடுத்த பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த சீனிவாசன். தமிழக அரசு சார்பில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நியாயவிலைக் கடையில் நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கிருந்த முன்னாள் திமுக கவுன்சிலரான பரமேஸ்வரன் என்பவர் சீனிவாசனிடம் தகராறு ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து ஊராட்சி மன்றத் தலைவரான அதிமுகவை சேர்ந்த சீனிவாசனின் டிரைவர் அவரை கேட்டுள்ளார். அப்போது திமுகவினர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் டிரைவரை பலமாக தாக்கியுள்ளனர். இது குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளும் தற்போது வைரலாகிறது.

இதுகுறித்து பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவரான சீனிவாசன் செவ்வாபேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்