பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்
கூட்டத்தில் பேசிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன்.
திருவள்ளூர் அருகே போந்தவாக்கம் கிராமத்தில் பூண்டி கிழக்கு திமுக ஒன்றிய திமுகவின் பொது உறுப்பினர்கள் கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் டி. ஜெ கோவிந்தராஜன் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் ஒன்றிய செயலாளர் டி.கே. சந்திரசேகர் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் பகலவன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பி.ஜே.மூர்த்தி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. ஹெச்.சேகர்,மாவட்ட, மாநில நிர்வாகிகள் பாஸ்கர் சுந்தரம், கே.வி.ஜி உமா மகேஸ்வரி, கன்னிகை ஜி.ஸ்டாலின், ரமேஷ், வி.பி.ரவிக்குமார், அபிராமி குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜான் பொன்னுசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் காண்டீபன், அயிலகாணி கேசவன் ஆகியோர் வரவேற்றார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு 100ரூபாய் நாணயம் வெளியிட்டதற்கு கல்லூரியில் படிக்கின்ற ஏழை மாணவர்களுக்கு ரூபாய் 1000, வழங்கியதற்கும், அதேபோல் திறன் பட செயல்பட்டு வரும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் வருகின்ற 17ஆம் தேதி சென்னை ஒய் எம் சி மைதானத்தில் நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் திரளாக நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொரு கிளைகளிலும் கிளை கழகக் கூட்டங்களை நடத்திட வேண்டும் என நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.இதில் நிர்வாகிகள் சுதாகர், சிவய்யா, வழக்கறிஞர் வெஸ்லி, தாமோதரன், கணேசன், சாந்தகுமார், டார்லிங் ராஜா, நளாயினி, யுகேந்தர் ஆகிய உட்பட திரளான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய துணைச் செயலாளர் சித்ரா பாபு நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu