திருவள்ளூர் சாலை பாதுகாப்பு மாத விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு
திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார்.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றினாலே விபத்துகளை தவிர்க்கலாம் என திருவள்ளூரில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்நடைபெற்ற ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி மற்றும் நடமாடும் வாகன கண்காட்சியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கூறினார்.
திருவள்ளூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கி வரும் பிப்ரவரி 14 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி திருவள்ளூர் வட்டாரத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் நகரின் முக்கிய இடங்களில் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி ஊர்வலம் நடைபெற்றது.
இதில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது, வாகனம் ஓட்டும்போது, செல்போன் பயன்படுத்தாமல் இருப்பது குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது,
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கூறுகையில்
சாலை விதிமுறைகளை பின்பற்றி வாகனத்தை பொதுமக்கள் இயக்கினால் விபத்துகளை முற்றிலும் குறைக்க முடியும் என்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகன், ஸ்ரீதரன், இளமுருகன், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மோகன், காவேரி, கருப்பையா, ராஜராஜேஸ்வரி, ஆகியோர் கலந்து கொண்டனர்.சாலை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu