சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்
X

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கமாக பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இங்கிருந்து செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் ஆகிய ஏரிகளுக்கு நீர் அனுப்பப்பட்டு சென்னை குடிநீருக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியரால் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது இணைப்பு கால்வாய் வழியாக மற்ற ஏரிகளுக்கு நீர் அனுப்பும் முறை மற்றும் ஏரியின் நீர் இருப்பு, அணைகளின் நீர்மட்டம், மக்களின் பயன்பாடு ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகையில் ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியின் போது பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!